follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP2நிலுவைத்தொகை செலுத்தத் தவறினால் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானம்

நிலுவைத்தொகை செலுத்தத் தவறினால் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானம்

Published on

நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று அழைக்கப்பட்ட போதே மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்த ஐந்து நிறுவனங்களும் செலுத்தாத வரிப்பணத்தின் பெறுமதி ஆறு பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக வழக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உரிய வரிப்பணத்தை வசூலிக்குமாறு மதுவரி ஆணையர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும், வரி செலுத்துவதை புறக்கணிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூனில் ஒரு இலட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் முதல் 26 நாட்களில், 116,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி...

காணாமல் போன மீனவர்களில் மூவரின் சடலங்கள் மீட்பு

காலி கடற்கரையில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் குறித்த...

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு...