follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

Published on

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிபுணர் குழுவில் விடயம் சார்ந்த விசேட நிபுணத்துவம் கொண்ட 12 நிபுணர்கள் உள்ளடங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

பேர வாவியை தூய்மையாக்குவதற்காக இதற்கு முன்னர் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.

பேர வாவியில் துர்நாற்றம் வீசுவதற்கும் நீரின் நிறமாற்றத்திற்கும் பாசிகள் அதிகரித்திருப்பதே காரணமென அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு விடயத்துடன் தொடர்புடைய நிபுணர் குழுவின் மூலம் விரைவாக வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுமெனவும் அமைச்சர் அனுர கருணாதிலக்க மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...