follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

Published on

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இப்புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் பலஸ்தீன் காஸா பகுதிகளில் உள்ள மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலஸ்தீன் காஸா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் முகாம்கள், வைத்தியசாலைகள் மற்றும் குடியிருப்புக்கள் மீது ஆக்கிரமிப்பு இராணுவம் நிகழ்த்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என தொடர்ந்தும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஈவிரக்கமின்றி அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அப்பாவிப் பொதுமக்கள் மீதான, எவ்வித நியாயங்களும் கற்பிக்க முடியாத இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிப்பதோடு, இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு அப்பாவி உயிர்கள் மேலும் பலியாவதை தடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறது.

அல்லாஹு தஆலா அப்பாவி பொதுமக்களைப் பாதுகாத்து, உலகில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்டுவானாக!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...