ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டது.
இந்நிலையில், இக்குழுவில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தள்ளது.