2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.எம்.பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) எழுத்தாணை (ரிட்) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன், 2024 மார்ச் 05ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கே.டபிள்யூ. கண்டம்பியை குறித்த பதவியில் நியமிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த நியமனத்தை சவாலுக்குட்படுத்தி, கண்டம்பி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.