நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்க்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.