2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மே 14 ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்ததாவது, பாதுகாப்பானதும் நவீன வசதிகளுடன் கூடிய பேரூந்துகள் மட்டுமே எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனும் புதிய விதிமுறைகள் மூலம் பொதுப் போக்குவரத்து சேவையின் தரம் மற்றும் பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பின்பற்றுகிறதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.