இந்த ஆண்டு இதுவரை 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாதத்தில் மட்டும் 3,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலானோர் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.