தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 20,942 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் முதல் 4 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், மே மாதத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த மாதம் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.