follow the truth

follow the truth

May, 23, 2025
HomeTOP1நீண்ட தூர சேவை பஸ்களுக்கு எஞ்சின் தொடர்பிலான அறிக்கை கட்டாயம்

நீண்ட தூர சேவை பஸ்களுக்கு எஞ்சின் தொடர்பிலான அறிக்கை கட்டாயம்

Published on

நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு எஞ்சின் சரிபார்த்த அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நீண்ட தூர சேவை பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது, மேலும் 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் அனைத்து பேருந்துகளும் இந்த அறிக்கையைப் பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் பொறியியல் அறிக்கையைப் பெறுவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளுக்கு டிக்கெட் வழங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து இயக்குநரகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட,

ஜூலை முதலாம் திகதி முதல் பயணிகள் பேருந்துகளில் பொருத்தப்படும் கூடுதல் சாதனங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த திசாநாயக்க கைது

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம்...

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று(21) அலரி...

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்படுத்தல் குறித்து செயலமர்வு

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...