follow the truth

follow the truth

May, 24, 2025
HomeTOP2உப்பு இறக்குமதி செய்வதற்கு எந்தவித தடையையும் நாங்கள் விதிக்கவில்லை

உப்பு இறக்குமதி செய்வதற்கு எந்தவித தடையையும் நாங்கள் விதிக்கவில்லை

Published on

சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கு பல்வேறு தடைகளை உருவாக்கி வருவதாக வெளியான செய்தி தவறானது எனவும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் அல்லது அதன் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனத்தால் அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும் ஊடகங்களில் பல தவறான செய்திகள் பரப்பப்படுவதை அவதானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி. ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் விளக்கமளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், 22.05.2025 நிலவரப்படி, 117 இறக்குமதியாளர்கள் உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கோரிக்கைக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேற்படி விண்ணப்பதாரர்கள் கோரியபடி, நேற்று (22) நிலவரப்படி, 150,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த உப்புத் தொகுதி துறைமுகத்தை அடைந்தவுடன் விரைவாக விடுவிப்பதற்கும் தேவையான அனுமதி வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தாமதம் ஏற்பட இடமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பி. ஆனந்த ஜெயலால் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...