follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP2பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்யக் கூடும்

பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்யக் கூடும்

Published on

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளர் கைது

தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளர் அசோக சேபால இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல் – ஜூன் 06 விசாரணைக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி இலங்கை மின்சார...

அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் நாளை இலங்கை விஜயம்

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள்,...