follow the truth

follow the truth

June, 9, 2025
HomeTOP2நாளை மறுதினம் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

நாளை மறுதினம் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

Published on

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (11) புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பின் திருத்தம் மற்றும் பிரதான அமைப்புகளுடனான அபிவிருத்திப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட...

CIDயில் ஆஜராகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்...

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று...