ஜூன் மாதத்தின் முதல் 26 நாட்களில், 116,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகைத் தந்துள்ளனர்.
இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,146,272 ஆக அதிகரித்துள்ளது.