கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை எளிதாக்குவதற்காக இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.