கஹவத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பை வழங்க சுமார் 150 பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.