2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் மாத்திரம், இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 ஆக இருந்தது, இது 2024 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
கடந்த மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் முறையே இந்தியா, இங்கிலாந்து, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர்.