நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் மஹேஷி விஜேரத்னவின் மகள் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.