2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள் வழங்கப்பட்ட போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை பதிவாகியுள்ளது.
அவ்வாறு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் பற்றிப் பரிசீலிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு 2025.05.17 அன்று மத்திய கலாச்சார நிதியத்தின் 223 ஆவது நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, குறித்த பணிகளுக்காக ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி ஜீ.எம்.டப்ளிவ். பிரதீப் ஜயதிலக்கவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.