முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.
தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அப்பால் மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைச் சேகரித்த குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் மேர்வின் சில்வா, அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் 2020 மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 மார்ச் 31 ஆம் திகதி வரை சொகுசு வாகனங்கள், காணிகள் மற்றும் பிற மதிப்புள்ள சொத்துக்களை அவர் கொள்வனவு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.