மீரிகம, 20ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.