follow the truth

follow the truth

July, 15, 2025
Homeலைஃப்ஸ்டைல்உடல் எடை குறைய சப்பாத்தி சாப்பிடுறீங்களா?

உடல் எடை குறைய சப்பாத்தி சாப்பிடுறீங்களா?

Published on

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் அதிக எடையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், உடல் எடையை குறைக்க சிலர் ஜிம்மில் தீவிர பயிற்சிகளை செய்கிறார்கள். மற்றவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உடல் எடை குறைக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பது சப்பாத்தி தான். எடையை குறைக்க நினைப்பவர்கள் அரிசிக்கு பதில் சப்பாத்தியை மாற்றாக எடுத்துக்கொள்கின்றனர்.

குறிப்பாக, ஒரு வேளை உணவிலாவது பலரும் கோதுமை மாவு அல்லது சோள மாவு சப்பாத்தியை எடுத்துக்கொள்கின்றனர். அந்த வகையில், தினசரி சப்பாத்தி சாப்பிடுவது நல்லதா? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

நார்ச்சத்து நிறைந்தது: சப்பாத்திகள் பொதுவாக கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.

ஊட்டச்சத்துக்கள்: சப்பாத்திகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். அவை வைட்டமின்கள் B1, B2, B3, B6, B9 மற்றும் E, அத்துடன் இரும்பு, தாமிரம், மாங்கனீசு, சிலிக்கான், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், அயோடின், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது. இவை உடலுக்கு தேவையான தினசரி ஊட்டச்சத்துக்களை சிறிய அளவில் பூர்த்தி செய்ய உதவுகிறது. கூடுதலாக, இவற்றில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்கிறது. மேலும் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு: கோதுமை அரிசியை விட குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. சப்பாத்திகள் இரத்த சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துவதாகவும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கு நல்ல மாற்றாக இருக்கும் என தெரியவந்துள்ளது. சப்பாத்தி உட்கொள்வது இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதாக 2020ம் ஆண்டு NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

சரும ஆரோக்கியம்: சப்பாத்திகளில் உள்ள பி வைட்டமின்கள், துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

சப்பாத்தி செய்யும் போது இதில் கவனம் தேவை:

எண்ணெயை தவிர்க்கவும்: அதிக எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சப்பாத்தி செய்வது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர வழிவகுக்கும். அதனால் முடிந்தவரை குறைந்த நெய் அல்லது எண்ணெயைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. உண்மையில், மாவு பிசையும் போதும் சப்பாத்தி சுடும் போது, எண்ணெய் பயன்படுத்தாமல் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சைட் டிஷ்ஷில் கவனம்: சந்தையில் நாம் வாங்கும் மாவில் மைதா இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, வீட்டிலேயே கோதுமை மாவு அரைத்து பயன்படுத்துவது சிறந்தது. மேலும், சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு கறியை விட, அனைத்து வகையான காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்பட்ட குருமா செய்து சாப்பிடுவது சிறந்தது.

மைதா இல்லாமல்: கோதுமை மாவுடன், சோயாபீன் மாவு, சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் மாவு அல்லது சந்தையில் கிடைக்கும் பல தானிய மாவையும் பயன்படுத்தலாம் . இருப்பினும், மைதா 0% ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தினமும் சுடுநீர் குடித்தால் உண்மையில் உடல் கொழுப்பு குறையுமா? [VIDEO]

உலகளவில் பெரும்பாலானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை தான் உடல் பருமன். இந்த உடல் பருமன் பிரச்சினையை...

இதையெல்லாம் காலை உணவாக சாப்பிடவே கூடாதா?

வழக்கமாக, காலை உணவுதான் மிகவும் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் அதே வேளையில், அதைத்தான் பெரும்பாலுமான...

தலை முடி ஈரமாக இருக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க

முடி ஈரமாக இருக்கும்போது, ​​முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக...