கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு உதவிய நான்கு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாகவும், இளைஞர்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு அறிவித்திருந்தது.