நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைகளுக்கு மத்தியில் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடித்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், எதிர்வரும் அமர்வுகளில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் குறித்து ஆலோசிப்பதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எதிர்வரும் திங்கட்கிழமை (07) கூடவுள்ளது.
அத்துடன், பாராளுமன்றம் எதிர்வரும் 08ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கூடவிருப்பதுடன், 11ஆம் திகதி வரை நான்கு நாட்கள் அமர்வுகளை நடத்துவதற்கு இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதற்கும், இதன் பரிந்துரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்குமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு 08ஆம் திகதி கூடவுள்ளன.