சுகாதார உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவருவது தொடரபான தீர்மானம் எடுப்பதகாக சுகாதார உத்தியோகத்தர்கள் சம்மேளனம் இன்று ஒன்றுக்கூடவுள்ளது.
இதேவேளை, சகாதார சேவை தொழிற்துறை பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக கொள்கையொன்றை கடைப்பிடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சரினால் இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.