தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படுமாயின் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தயார் என சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று தமக்கான தீர்வு வழங்கப்படும் என நம்புவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.