உக்ரேன் அமைதியை வேண்டுவதாகவும், வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) தொடர்பான நடுநிலைமை உள்ளடங்கலாக ரஷ்யாவுடன் பேச்சுக்களுக்குத் தயாரென உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைகஹலியோ பொடொலயாக் தெரிவித்துள்ளார்.
பேச்சுக்கள் சாத்தியமென்றால், அவை நடைபெற வேண்டுமென்றும், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலேயே அவர்கள் பேச்சுக்களை நடத்த விரும்புவதாக அவர்கள் தெரிவித்தாலும், அது குறித்து நாங்கள் பயப்படவில்லை என பொடொலயக் குறிப்பிட்டுள்ளார்.