ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உக்ரேனிய அணுசக்தி ஆய்வாளரின் கூற்றுப்படி,
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜாபோரிஜியா (Zaporizhzhia) ஆலையின் கட்டுப்பாட்டை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியுள்ளன.
இந்த வசதியிலுள்ள ஊழியர்கள் அணுஉலையை தொடர்ந்து இயக்கி, சாதாரண பாதுகாப்பு விதிகளின்படி மின்சாரம் வழங்குவதாக ஆய்வாளர் கூறினார்.
வெள்ளியன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஆலையைத் தாக்கி, அருகில் இருந்த ஐந்து அடுக்கு பயிற்சி நிலையத்திற்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்புடுகின்றது.