follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுசர்வ கட்சி மாநாட்டில் பங்குபற்ற தேசிய மக்கள் சக்தி தீர்மானம்!

சர்வ கட்சி மாநாட்டில் பங்குபற்ற தேசிய மக்கள் சக்தி தீர்மானம்!

Published on

எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் பங்குபற்ற தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த முறை சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மாநாட்டில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது கட்சிகளின் யோசனைகளும் பரிந்துரைகளும் கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் ஊடாக முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...