எரிபொருளை அதிகளவில் சேமித்தல், சட்டவிரோத விற்பனையில் ஈடுப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் நோக்கில் நேற்று விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 10,115 லீட்டர் டீசலும், 5,690 லீட்டர் பெற்றோல் மற்றும் 5,620 லீட்டர் மண்ணெண்ணைய் ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹல் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு சட்ட விரோதமாக எரிபொருள் சேகரித்த 135 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர்களிடம் இருந்து பெற்றோலும் டீசலும் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, எரிபொருளை சேமித்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.