இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார பதவியில் இருந்து விலகினால் மாத்திரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்வ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய விவசாய இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார நேற்று முன்தினம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அவரை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதற்குக் கட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.
கடந்த 5 ஆம் திகதி, அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுவில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவும் உள்ளடங்கியிருந்தார்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவை அப்பதவியிலிருந்து நீக்கினால், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் உள்ளிட்ட நிர்வாகம் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.