கடனை மறுசீரமைப்பதற்கு சீனா விரும்பம் தெரிவிக்கவில்லை எனவும் தற்போதுள்ள கடனை தீர்ப்பதற்கு மீண்டும் மற்றுமொரு கடனை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
சீனா உலக நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. கடன் மறுசீரமைப்பிற்கு சீனா இணக்கம் வெளியிடாமைக்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கியுள்ளார். இலங்கையின் கோரிக்கைக்கு சீனா இணக்கம் வெளியிட்டால், ஏனைய நாடுகளது கோரிக்கைக்கும் இணக்கம் வெளியிட வேண்டிய நிலை சீனாவுக்கு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
கடனை திருப்பி செலுத்துவது தொடர்பில் இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானம், நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார முகாமைத்துவத்திற்காக மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.. தற்போதைய பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு நிதி அமைச்சர் பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.