இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் வங்கி முறைமையினூடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.