ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஏனைய 3 பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.