இம்முறை புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1585 பேரை விட அதிகமானவர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் இடம்பெறும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்.
2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஹஜ் கடமைக்கு செல்வதற்கு 4000-க்கும் அதிகமானவர்கள் பதிவு செய்திருந்ததாகவும் அவர்களின் அநேகமானவர்கள் பணம் செலுத்தியுள்ளதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
மேலும் இம்முறை ஹஜ் கடமைக்கு செல்வோர் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனவே, அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு முன்னுரிமை வழங்க வேண்டியவர்கள் தொடர்பிலான வழிகாட்டியொன்றை தயாரித்து வருவதாக அவர் கூறினார்.