உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலைத் திருத்தங்கள் தொடர்பான அறிவித்தலை மதுபான விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.