நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன நாளை(03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் குறித்த பிரேரணைகளுக்கு ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்தவர்கள் விபரம் வெளிக்கொண்டுவரப்படுவதுடன், இரு நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிய முடியும்.