நாளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மாற்றமில்லாமல் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.