மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலையில் நாட்டுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை விடுத்து அரசியல் தீர்மானம் ஒன்றுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரணில் பிரதமராக நியமிக்கப்படும் விடயமானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் எனவும் இது அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமான செயற்பாடாகும் எனவும் ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.