follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுசர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி – ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி – ரணில்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்க உதவி செய்யும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் Antony Blinken தொலைபேசியில் உரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து தான் இதன்போது விளக்கமளித்ததாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இரு நாடுகளும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் Anthony Blinken ஒப்புக்கொண்டார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு...

பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று...