follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்றில் பிரதமர் ரணில் இன்று விசேட அறிக்கை!

நாடாளுமன்றில் பிரதமர் ரணில் இன்று விசேட அறிக்கை!

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, “அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு ஊடகங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவித்தன. உண்மை நிலையை அறிய விரும்புகிறோம்.

இன்று பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து ஒரு அறிக்கையை நாங்கள் உண்மையில் எதிர்பார்த்தோம். எவ்வாறாயினும் அவ்வாறானதொன்று நடைபெறவில்லை’ என லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார்.

அத்தோடு, இந்த தேசத்தின் மக்கள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதால், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும் என்று தாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...