follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்முல்லா முகம்மது ஹசன் தலைமையில் ஆப்கானில் இடைக்கால அரசு அறிவிப்பு

முல்லா முகம்மது ஹசன் தலைமையில் ஆப்கானில் இடைக்கால அரசு அறிவிப்பு

Published on

ஆப்கானிஸ்தானில் முல்லா முகம்மது ஹசன் அகுந்த் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை தலிபான் இன்று அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து புதிய அரசின் நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர். புதிய அரசு விரைவில் பதவி ஏற்க உள்ள நிலையில் இன்று தலிபான் அரசின் தலைவராக முல்லா முகம்மது ஹசன் அகுந்த், துணை தலைவராக அப்துல் கனி பராதர், உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, பாதுகாப்புத்துறை அமைச்சராக யாகூப் உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

முன்னதாக ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் அறிவித்தனர்.

முன்னதாக புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த தகவல் தலிபான்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...