follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுநவீன் திசாநாயக்க மத்திய மாகாண ஆளுநர் ஆகின்றார்?

நவீன் திசாநாயக்க மத்திய மாகாண ஆளுநர் ஆகின்றார்?

Published on

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க மத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மத்திய மாகாண ஆளுநராக லலித் ஏ கமகே செயட்பட்டு வரும் நிலையில் அந்த பதவியில் மாற்றங்கள் வரப்போவதாக ஏற்கனேவே தகவல்கள் கசிந்திருந்தன.

தற்பொழுது செயற்படும் ஆளுநர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நவீன் திசாநாயக்க கடந்த பொது தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் சென்று பதவியொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

மதுபான உரிமப் பத்திரம் வழங்கும் சூதாட்டம் குறித்து சஜித் கேள்வி

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக இது வழங்கப்பட்டு வருகிறது. இடைத்தரகர்கள் பணம் சம்பாதிக்கும் விதமாக...

யுக்ரைனில் போருக்காக சென்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ரஷ்யா மற்றும் யுக்ரைனில் போருக்காக சென்றுள்ள இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய்களின் உறவினர்கள் இன்று(14) கொழும்பில் உள்ள...

புற்று நோய்க்கு வழிவகுக்கும் பூஞ்சை மசாலாப் பொருட்களை சாப்பிட வேண்டாம்

அதிகளவில் புற்றுநோயை உண்டாக்கும் பூஞ்சை காணப்படுவதால், சந்தையில் இருந்து வாங்கப்படும் அல்லது வீட்டில் சேமித்து வைக்கப்படும் தானியங்கள் மற்றும்...