follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉள்நாடுகுருந்தூர்மலை விவகாரம்: ரவிகரன் பிணையில் விடுதலை!

குருந்தூர்மலை விவகாரம்: ரவிகரன் பிணையில் விடுதலை!

Published on

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்றைய தினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னாள் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய
விசாரணைகளை மேற்கொள்வதற்காக து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு காவல்துறையினர் நேற்று மாலை அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் காவல் நிலையம் சென்ற இருவரையும் நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், இரத்தினராசா மயூரன் ஆகியோர் பிணையில் விடுதலை சற்றமுன் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம்...

வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். வெளிநாட்டுக்...