follow the truth

follow the truth

May, 23, 2025
HomeTOP1கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

Published on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பேராசிரியர் ஐ.எம் கருணாதிலகவிற்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக வைத்தியக் கல்வித்துறையின் முன்னோடி என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய கல்வி தொடர்பிலான முதலாவது பேராசிரியர் என்ற கௌரவத்திற்கும் உரித்தானவர். அவர் 2000 ஜூன் மாதத்திலிருந்து கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய ராச்சியத்தின் ஸ்கொட்லண்ட் டண்டீ பல்கலைக்கழகங்களில் (University of Dundee) பட்டம் பெற்றவர். அதேபோல் ஐக்கிய இராச்சியத்தின் உயர்கல்வி அக்கடமியிலும், எடின்பரோ ரோயல் வைத்திய அறிவியல் நிறுவனத்திலும் உயர் அங்கத்துவம் வகிக்கிறார்.

வைத்திய கல்வி தொடர்பிலான நிபுணத்துவம் காரணமாக பேராசிரியர் ஐ.எம்.கருணாதிலக்க சர்வதேச வரவேற்பை பெற்றுள்ளார். அவர் உலக சுகாதார அமைப்பு (WHO),உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB),பிரஜைகள் சுகாதாரத்துக்கான ஆசிய பசுபிக் கல்வி சம்மேளனம் (APACPH) மற்றும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் வைத்திய கல்வி சங்கம் (SEARAME) உள்ளிட் முன்னணி சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதால் வலய மற்றும் உலக அளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்.

அவர் இலங்கை மருத்துவச் சங்கத்தின் (SLMA) செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் வைத்திய கல்வியியலாளர் கல்லூரியின் (CME) ஆரம்ப கால தலைவராகவும், தொழில் வான்மையாளர்கள் அமைப்பின் (OPA) உப தலைவராகவும் பணியாற்றியுள்ள பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக 2021 ஆம் ஆண்டில் பிரஜைகள் சுகாதாரத்திற்கான ஆசிய, பசுபிக் கல்வி சம்மேளனத்தின் (APACPH) பொதுச் செயலாளராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதுடன் இந்த புகழ்மிக்க பதவியைப் பெற்ற முதலாவது இலங்கையர் என்ற கௌரவத்தையும் பெற்றார்.

பேராசிரியர் ஐ.எம்.கருணாதிலக 1921 ஆம் ஆண்டில் இலங்கை பல்கலைக்கழகமாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் 20 ஆவது உபவேந்தர் ஆவார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...