ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 21% குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
29,802 சுற்றுலாப் பயணிகளின் வருகை செப்டம்பர் 2022 இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த சுற்றுலாப் பயணிகளின் வரவு இதுவாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.