follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉலகம்இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் - மு.க.ஸ்டாலின்

இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் – மு.க.ஸ்டாலின்

Published on

இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது என தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை தாங்கள் நன்கு அறிவீர்கள் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே, இந்த சம்பவத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம் – பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி...