follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுதனுஷ்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published on

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு பிறபிக்கப்படது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இன்று இந்த வழக்கை பெப்ரவரி 23-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

தனுஷ்க பெப்ரவரியில் நீதிமன்றில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுர்வேத துறையில் 304 மருத்துவர்களுக்கான நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா மருத்துவமனையை,...

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்...

சொத்து அறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...