இணையத்தளம் முழுவதும் போலிச் செய்திகள், தனியுரிமை மற்றும் கோபத்தை ஏற்படுத்தும் ஊடகங்களால் நிரம்பியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
அதை மாற்றி இணையவெளியை அழகான இடமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சைபர் லீடர்ஸ் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் கௌரவமான சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (19) ஆரம்பமான இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகர் எரந்த கினிகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.