follow the truth

follow the truth

May, 10, 2025
Homeவணிகம்தூய்மை பணியாளர்களை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள Coca-Cola அறக்கட்டளை - SLRCS

தூய்மை பணியாளர்களை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள Coca-Cola அறக்கட்டளை – SLRCS

Published on

1,800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள Coca-Cola அறக்கட்டளை மற்றும் SLRCS நாட்டிலுள்ள சமூகங்களின் நல்வாழ்வையும் மரியாதையையும் மேம்படுத்துவதற்காக இலங்கையிலுள்ள கழிவு சேகரிப்பவர்கள் செய்யும் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இம்முறை உலக மீள்சுழற்சி தினத்தில் தூய்மை பணியாளர்களின் உணவுப் பாதுகாப்பின்மைக்கு உடனடி தீர்வை வழங்க Coca-Cola அறக்கட்டளை (TCCF) மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) ஆகியன இணைந்து செயற்பட்டுள்ளன.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் கழிவுகளை சேகரிப்பதை பிரதான வருமானமாக கொண்ட 1800 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் மற்றும் மருந்துகளுடன் அத்தியாவசிய உணவுப் பொதியை வழங்குவதற்கு இவ்விரு பிரிவினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

2022ஆம் ஆண்டில் இலங்கையில் வறுமை நிலை 25%மாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இதனால், இந்நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், உணவின் ஊட்டச்சத்து தரமும் குறைந்து, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

அதனால்தான், இந்த இக்கட்டான சூழ்நிலையில், TCCF மற்றும் SLRCS ஆகியவை 10 மாவட்டங்களில் இருந்து அவதானத்திற்குரிய தூய்மை பணியாளர்களின் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்குவதன் மூலம் இதுவரை செயல்படுத்தப்பட்ட ‘Say We Care’ திட்டத்தை மேலும் விஸ்தரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அந்த மாவட்டங்களில் உள்ள கழிவுகளை சேகரிப்பவர்கள் உட்பட, பெரும் எண்ணிக்கையிலான சமூகங்கள் பொருளாதார சூழ்நிலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 4 முதல் 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சுமார் 2 மாதங்களுக்கு தேவையான 1800 உணவுப் பொதிகள் பெண்/ஒற்றைப் பெற்றோர் தலைமைக் குடும்பங்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (தினசரி ஊதியம் பெறுவோர்), வீடற்ற குடும்பங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், TCCF மற்றும் SLRCS ஆகியவை நிரந்தர நோய்வாய்பட்ட குடும்பங்கள் அல்லது உடல் அல்லது மனநல குறைபாடுகள் உள்ளவர்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்கள், நிலையான வருமானம் இல்லாத முதியோர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளன. சுமார் 45 கிலோ எடையுள்ள இந்த உணவுப் பொதியில் அரிசி, பருப்பு, கோதுமை மாவு, உலர் உணவுகளான நெத்தலி கருவாடு், டின் மீன்கள், கடலை போன்ற ஊட்டச்சத்து தானியங்கள் மற்றும் சவர்க்காரம், கிருமிநாசினிகள் மற்றும் பற்பசை போன்ற அத்தியாவசிய வீட்டுப் பொருட்களும் இதில் உள்ளடங்குகின்றன. TCCF, இந்தக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதன் மூலமும், முழு உணவுக்கான அவர்களின் பொருளாதாரப் போராட்டத்தை வலுப்படுத்துவதன் மூலமும் அதன் மதிப்பு வலையமைப்பை விரிவுபடுத்த முடியும், மேலும் நாட்டில் கழிவு சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி நடவடிக்கைகளையும் மேம்படுத்த முடியும்.

இந்தத் திட்டத்தின் தொடக்கம் மற்றும் ‘Say We Care’ திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த கோகா கோலா அறக்கட்டளையின் தலைவர் Saadia Madsbjerg, “பின்னடைந்திருக்கும் சமூகங்களை மேம்படுத்துவதற்கு TCCF குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. இலங்கையில் பல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலாப நோக்கற்ற அமைப்பான இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் எமது நீண்ட கால பங்காளித்துவத்தின் ஊடாக, நாட்டில் பல சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது.” என தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, “கோகா கோலா அறக்கட்டளை போன்ற உலகளாவிய அமைப்பானது எமது நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனில் உண்மையான அக்கறை காட்டுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதுவரை TCCF உடன் இணைந்து செயற்பட்ட ஒவ்வொரு திட்டமும் மிகவும் வெற்றிகரமானது மற்றும் அவர்கள் வாழ்க்கையை மிகவும் சாதகமான முறையில் மாற்றுவதை நாங்கள் கண்டோம். சமூகத்தில் அதிக கவனத்தைப் பெறாத தனித்துவமான சேவையை வழங்கும் ஒரு குழுவினரின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த கூட்டாண்மை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாற்றத்திற்கான பங்காளியாக மீண்டும் ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பளித்த TCCFக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் எங்கள் மக்களுக்கு மேலும் நன்மைகளை வழங்க இதுபோன்ற ஒத்துழைப்புகளை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...